உலகத் துப்பாக்கிச் சுடும் போட்டி: தங்கம் வென்ற தமிழ் வீராங்கனை இளவேனில் வாலறிவன்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

சீனாவில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ணம் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றுள்ளார்.

உலகக் கிண்ணம் துப்பாக்கிச் சுடும் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில், பெண்களுக்கான 10 மீற்றர் ஏர் ரைபிள் பிரிவில் இளவேனில் வாலறிவன் பங்கேற்றார்.

இதன் இறுதிப் போட்டி இன்று நடந்தது. இதில் அவர், 250.8 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை அவர் வசப்படுத்தியுள்ளார்.

ஏற்கெனவே இவர், பிரேசிலில் நடந்த சர்வதேசத் துப்பாக்கிச் சுடுதல், உலகக் கிண்ணம் போட்டியில் தங்கம் வென்று சாதனைப் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்