இலங்கையை சேர்ந்த பிரபல வீராங்கனை விபத்தில் சிக்கி காயம்! புகைப்படத்துடன் வெளியான பின்னணி

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை தடகள அணியின் தலைவியும் 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் தேசிய சம்பியனுமாகிய நிமாலி லியனாராச்சி விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார்.

நிமாலி தனது இரு சக்கர வாகனத்தில் காலையில் பயிற்சிக்காக பயணித்துக் கொண்டிருந்தபோதே விபத்தில் சிக்கியுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நிமாலி நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகள குழாத்துக்குத் தலைமை தாங்கும் நிலையில் விபத்தில் சிக்கியுள்ளார்.

இதோடு குறித்த போட்டித் தொடரில் 800 மீற்றர், 1500 மீற்றர் மற்றும் 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டிகளிலும் நிமாலி கலந்துகொள்விருந்தார்.

கடந்த முறை நடைபெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் நிமாலி தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்