டோனியின் எதிர்காலம் குறித்து இறுதி முடிவு.. வெளிப்படையாக கூறிய பிசிசிஐ தலைவர் கங்குலி

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் நட்சத்திர வீரர் டோனியின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டித் தொடர் முடிந்தபின் டோனியின் எதிர்காலம் குறித்த தெளிவான முடிவு கிடைத்துவிடும் என சில தினங்களுக்கு முன இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார்.

இதனிடையே சமீபத்தில், மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற டோனி, ஜனவரிவரை என்னிடம் யாரும் எதுவும் கேட்காதீர்கள் என நிருபர்களிடம் தெரிவித்துச்சென்றார்.

இந்நிலையில் கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி,டோனியின் எதிர்காலம் குறித்து முடிவு எடுப்பதற்கு போதுமான அவகாசம், காலம் இருக்கிறது.

இன்னும் 3 மாதங்களில் அவரின் எதிர்காலம் குறித்த தெளிவான தகவல் எங்களுக்குக் கிடைத்துவிடும். நாங்கள் தெளிவாக இருக்கிறோம். ஆனால், சில விஷயங்களை பொது வெளியில் நாம் பேச முடியாது.

பிசிசிஐ, தேர்வுக்குழுவினர், டோனி இடையை வெளிப்படைத்தன்மை இருக்கிறது. டோனி போன்ற சாம்பியன் வீரரை, உலகின் தலைசிறந்த, இந்தியாவின் கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டவரை அணுகும்போது, சில ரகசியமாகத்தான் சில விஷயங்களை நாங்கள் வைத்திருக்க வேண்டும். மற்ற வகையில் வாரியம், தேர்வுக்குழுவின் நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது எனத் தெரிவித்தார்

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்