மைதானத்தில் டேவிட் வார்னரின் ஹெல்மட்டை திருடிய சிறுவர்கள்: வெளியான படங்கள்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியின் போது இரண்டு சிறார்கள், டேவிட் வார்னர் மற்றொரு சிறுவனுக்கு கொடுத்த ஹெல்மட்டை திருடி சென்றுள்ளனர்.

பாகிஸ்தான் அணிக்கெதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், அவுஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 418 பந்துகளில் 335 ஓட்டங்களை பெற்றார்.

முதன்முறையாக முச்சதம் அடித்து அசத்திய வார்னர், பெவிலியன் நோக்கிய சென்றுகொண்டிருந்த போது தன்னுடைய கையில் இருந்த ஹெல்மட்டை ஒரு சிறுவனுக்கு பரிசளித்துவிட்டு சென்றார்.

அதனை பார்த்து சிறுவன் பெரும் உற்சகமடைந்தாலும், அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அங்கு நின்றுகொண்டிருந்த மற்ற இரண்டு சிறுவர்கள் அந்த ஹெல்மட்டை அவனிடம் இருந்து பறித்து சென்றனர்.

இந்த நிலையில் அந்த புகைப்படங்களை தங்களுடைய ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்துள்ள இணையதளவாசிகள், ஏமாற்றத்துடன் காணப்பட்ட அந்த சிறுவனுக்கு நீதி கோரி பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்