தயவு செய்து அதை டோனியிடம் கேளுங்கள்: சவுரவ் கங்குலி

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்
240Shares

எதிர்வரும் டி20 உலகக்கிண்ணம் தொடரில் டோனி விளையாடுவது குறித்து அவரிடமே கருத்து கேட்குமாறு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிறந்த விக்கெட் கீப்பருமான டோனி, நியூசிலாந்திற்கு எதிரான உலகக்கிண்ணம் அரையிறுதி தோல்விக்கு பின்னர் எந்த போட்டியிலும் கலந்துகொள்ளாமல் ஓய்வில் இருந்து வருகிறார்.

இதற்கிடையில் அவருடைய இடத்தை பூர்த்தி செய்யும் விதமாக களமிறக்கப்பட்ட ரிஷாப் பந்த், சமீபத்திய வாய்ப்புகள் அனைத்தையும் தவறவிட்டு வருவதால், கிரிக்கெட் ரசிகர்கள் டோனியை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவில் நடைபெற உள்ள 2020ம் ஆண்டிற்கான டி20 உலகக்கிண்ணம் தொடரின் ஒரு பகுதியாக டோனி இருப்பாரா என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

மும்பையில் நடைபெற்ற வாரியத்தின் 88 வது வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கு பின் பதிலளித்த அவர், தயவு செய்து இதனை டோனியிடம் கேளுங்கள் என கூறியுள்ளார்.

முன்னதாக மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட டோனி, கிரிக்கெட் எதிர்காலத்தைப் பற்றி ஜனவரி வரை என்னிடம் கேட்க வேண்டாம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்