புதிய அவதாரம் எடுத்த டோனி - வீடியோ

Report Print Abisha in ஏனைய விளையாட்டுக்கள்

இன்ஸ்டாகிராமில், டோனி பாட்டுபாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

டோனி எப்போது அணிக்கு திரும்புவர் என்ற கேள்வி பலரும் எழுப்பி கொண்டிருக்கின்றனர். இது குறித்து பிசிசிஐ தலைவர், சவுரவ் கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது அவர், அதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

டோனியிடம் கேட்டபோது, ஜனவரி வரை பொறுத்துக்கொள்ளுங்கள் என்று பதிலளித்திருந்தார்.

ஆனாலும். அவ்வப்போது டோனியின் செயல்பாடுகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதில் தற்போது டோனி ஒரு பழைய ஹிந்தி பாடல் ஒன்றை பாடுவது போன்ற வீடியோ வைரலாகி வருகின்றது.

அந்த வீடியோவில் டோனி மைக் பிடித்து பழைய இந்தி பாடல் ஒன்றைப் பாடுகிறார். இந்த வீடியோ பதிவிட்டதும் டோனி ரசிகர்கள் பலரும் வீடியோவைப் பதிவிட்ட நபருக்கு நன்றியைத் தெரிவித்து வருகின்றனர். உங்களின் பாட்டுப்பாடும் திறனும் அருமையாக உள்ளது எனப் பலரும் வாழ்த்துகள் பகிர்ந்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்