தெற்காசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்களை குவிக்கும் இலங்கை... எந்த நாடு முதல் இடத்தில் தெரியுமா?

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

நேபாளில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு போட்டியின் பதக்க பட்டியலில் மொத்தம் 252 பதங்கங்களுடன் இந்தியா முதல் இடத்திலும், இலங்கை 197 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

நேபாளில் தலைநகர் காத்மாண்டு உட்பட மூன்று நகரங்கள் 13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பதக்க பட்டடியலில் இந்தியா 132 தங்கம், 79 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 252 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக நேபாள் 45 தங்கம், 44 வெள்ளி, 76 வெண்கலம் என மொத்தம் 165 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், மூன்றாம் இடத்தில் இலங்கை 36 தங்கம், 68 வெள்ளி, 93 வெண்கலம் என 197 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

இதில் கடந்த 5-ஆம் திகதி மட்டும் இலங்கை வீரர்கள் தடை தாண்டுதல், முப்பாய்ச்சல் போட்டி, 400 மீற்றர் ஓட்டப்பந்தயம், நீச்சல் போட்டி என மொத்தம் 9 தங்கப்பத்தக்கத்தையும், ஒரு வெண்கல பதக்கத்தையும் வென்று அசத்தினர்.

இலங்கைக்கான முதல் தங்கத்தை மகளிருக்கான 100 மீற்றர் தடைதாண்டல் ஓட்டத்தில் லக்ஷிகா சுகந்தி வென்று கொடுத்தார். இவர் 100 மீட்டர் தடை தாண்டுதல் ஒட்டத்தை 13.68 நிமிடங்களில் கடந்தார், அதே போன்று ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் இலங்கையின் நட்சத்திர வீரரான அருண தர்ஷன தங்கப்பதக்கத்தை வென்றார்.

மேலும் கடந்த 10-ஆம் திகதி துவங்கிய இந்த தெற்காசிய விளையாட்டு போட்டி நாளையுடன் முடிவடைகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்