குடிபோதையில் மோசமாக திட்டி என் கையை உடைத்தார்! இந்திய கிரிக்கெட் அணி வீரர் மீது பரபரப்பு புகார்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரவீன் குமார் குடி போதையில் தன்னை அடித்ததோடு, தனது மகனை கீழே தள்ளி காயப்படுத்தியதாக நபர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

தீபக் சர்மா என்பவர் கூறுகையில், உத்தரபிரதேச மாநிலத்தின் மீரூட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் என் ஏழு வயது மகனுக்காக காத்து கொண்டிருந்தேன்.

அப்போது அங்கு காரில் வந்த என் பக்கத்து வீட்டில் வசிப்பவரும், இந்திய கிரிக்கெட் அணியின் வீரருமான பிரவீன்குமார் கீழே இறங்கினார்.

அவர் குடிபோதையில் இருந்த நிலையில் பேருந்து ஓட்டுனரை மோசமாக திட்டினார், பின்னர் என்னை திட்டியதோடு அடித்து என் கையை உடைத்தார்.

இதோடு என் மகனையும் பிடித்து கீழே தள்ளிவிட்டதில் அவனுக்கு காயம் ஏற்பட்டது.

இது குறித்து பொலிசில் புகார் அளித்தேன், ஆனால் பிரவீன்குமார் இந்திய கிரிக்கெட் சர்வதேச அணியின் வீரர் என்பதால் என் புகாரை ஏற்கமுடியாது என கூறி உயர் அதிகாரியிடம் தெரிவிக்குமாறு கூறினார்கள்.

மேலும் இந்த விடயத்தில் சமாதானமாக போய்விடுமாறு வற்புறுத்துகிறார்கள்,எனக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்படுகிறது என கூறியுள்ளார்.

அதே சமயத்தில் பொலிசார் கூறுகையில், தீபக்கும், பிரவீன்குமாரும் இது குறித்து எங்களிடம் கூறியுள்ளனர், இது தொடர்பிலான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரிக்கப்படும் என கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்