பிரபல நடிகையுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு... டேட்டிங் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஹர்திக் பாண்டியா!

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா புத்தாண்டில் நடிகர் நடாசா ஸ்டான்கோவிக் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது டேட்டிங் குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் குறித்த புகைப்படத்தை பதவிட்ட பாண்டியா, “ஆண்டை எனது பட்டாசுடன் தொடங்குகிறேன்” என தலைப்பிட்டுள்ளார்.

ஹார்டிக் நடாசா டேட்டிங் பற்றி வதந்திகள் சில காலமாக சமூக ஊடகங்கிளல் பரவி வரும் நிலையில், இந்த பதிவின் மூலம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஹர்திக்.

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 2019 செப்டம்பர் மாதம் முதல் கிரிக்கெட்டிலிருந்து விலகிய பாண்டியா, தற்போது காயத்திலிருந்து மீண்டு வருகிறார்.

அடுத்த மாதம் தொடங்கும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்