மைதானத்தில் சிறுமியின் கன்னத்தின் முத்தம் கொடுத்த ரஃபேல் நடால்: சுவாரஷ்ய சம்பவம்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

அவுஸ்திரேலிய ஓபன் தொடரில் பந்து தாக்கியதால் கவலையடைந்த சிறுமிக்கு, ரஃபேல் நடால் முத்தம் கொடுத்து தேற்றியுள்ளார்.

வியாழக்கிழமை மெல்போர்னில் நடந்த அவுஸ்திரேலிய ஓபன் தொடரில் அர்ஜென்டினாவின் ஃபெடரிகோ டெல்போனிஸுக்கு எதிராக, உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ரஃபேல் நடால் விளையாடினார்.

மூன்றாவது செட்டின் போது அவர் அடித்த பந்து, பந்து பொறுக்கிப்போடும் 13 வயது அனிதாவின் முகத்தை தாக்கியது.

இதனை பார்த்ததும் உடனடியாக அந்த டென்னிஸ் நட்சத்திரம் விரைந்து சென்று சிறுமியின் கன்னத்தில் முத்தமிட்டுள்ளார்.

அதோடு நில்லாமல் இன்று, சிறுமி மற்றும் அவருடைய குடும்பத்தினரை நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மேலும் சிறுமியுடன் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'அனிதா நன்றாக இருப்பதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்'. 'அவளையும் அவளுடைய சகோதரர் மார்க் மற்றும் பெற்றோர்களையும் சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நன்றி.' என பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அந்த சிறுமி, நடால் தனக்கு மிகவும் பிடித்த வீரர் என்றும், தன்னை மீண்டும் சோதித்துப் பார்க்க விரும்பியதாகவும், அவர்களது நட்பை உறுதிப்படுத்தும் விதமாக, தனிப்பட்ட செய்தியுடன் ஆட்டோகிராப் செய்யப்பட்ட தொப்பியை பரிசாக வழங்கியதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்