Kobe Bryant மரணம்: ஹெலிகாப்டரை உயரத்தில் செலுத்திய பைலட்! விசாரணை

Report Print Abisha in ஏனைய விளையாட்டுக்கள்

Kobe Bryant பயணித்த ஹெலிகாப்டரை உயரத்தில் செலுத்த பைலட் முயன்றதால் விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகின் கூடைபந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகாப்டர் விபத்தில், மகளுடன் பலியானார்.

Kobe Bryant அமெரிக்காவை சேர்ந்தவர் என்றாலும், அவரது இறப்பு உலகில் உள்ள அனைத்து விளையாட்டு ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், அந்த ஹெலிகாப்டர் விபத்து எதனால் நிகழ்ந்தது என்பது குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக தற்போது வெளியாகியுள்ள தகவலில் ஹெலிகாப்டரை இயக்கிய பைலட் அதை உயரத்தில் பறக்க செய்ய முற்சித்ததாகவும், அதனால் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்த ஹெலிகாப்டர், Burbank-ல் பனிமூட்டம் நிறைந்த சூழலிலும் அதை இயக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.

2,300 அடி உயரத்தில் சென்ற ஹெலிகாப்டர் இடது புறம் திருப்பி கிழ்நோக்கி சென்றுள்ளது. அந்நேரத்தில் கட்டுப்பாட்டாளர், பைலட்டிடம் இருந்து கூடுதல் தகவல் கேட்டும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக தெற்கு காலிபோர்னியா பகுதியில் காலநிலை எப்படி உள்ளது என்பது குறித்து வானிலை ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

குறிப்பாக அந்த ஹெலிகாப்டரில், cockpit குரல் பதிவு செய்யும் கருவி, எடுத்து செல்லப்படவில்லை என்றும், விபத்து நடந்த பகுதியில் உள்ள ஆதாரங்களை முழுவதும் எடுக்க முயல்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...