நீங்க இல்லனா சூப்பரா இருந்திருக்கும்..! பீட்டர்சனை ட்ரோல் செய்த சங்கக்காரா

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சனை இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்கார கிண்டிலத்துள்ளார்.

இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தனது கருத்துக்களை தைரியமாக வெளிப்படுத்துவதின் மூலம் அறியப்பட்டவர். அவர் அடிக்கடி சமூக ஊடக தளமான ட்விட்டர் வழியாக பல்வேறு தலைப்புகளில் தனது கருத்துக்களை முன்வைக்கிறார்.

சனிக்கிழமையன்று, பீட்டர்சன் தான் உடற்பயற்சி செய்வதைப் பற்றிய ஒரு படத்தை வெளியிட்டார். ‘ஓய்வு நாட்கள்’ இருக்கக்கூடாது. நன்றாக திட்டமிடுங்கள் என்று ட்வீட் செய்தார்.

குறித்த பதிவால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள், இளம் வயதினரை ஊக்கப்படுத்தியதற்காக 39 வயதான பீட்டர்சனை பாராட்டினர்.

ஆச்சரியமளிக்கும் விதமாக இந்த பதிவிற்கு இலங்கையின் முன்னாள் விக்கெட் கீப்பர்-துடுப்பாட்டகாரருமான குமார் சங்கக்காராவும் பதிலளித்தார். ஆனால், அது கிண்டலடிக்கும் வகையில் இருந்தது.

நீங்கள் இல்லாமல் அது ஒரு அழகான படமாக இருந்திருக்கும் என சங்கக்காரா பீட்டர்சனை கிண்டலடித்துள்ளார். சங்கக்காராவின் சுவாரஸ்யமான பதிலையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்