மார்பில் வேகமாக தாக்கிய பந்து! பரிதாபமாக உயிரிழந்த இளம் வீரர்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது பந்து மார்பில் வேகமாக பட்டதால் இளம் வீரர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்றது.

இதில் சூனாம்பேடு பகுதியை சேர்ந்த அணியும், அச்சிறுப்பாக்கம் அணிகளும் விளையாடிக்கொண்டிருந்த போது சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த சுனில் என்ற இளைஞர் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.

திரணியைச் சேர்ந்த கமலேஷ் பந்து வீசியுள்ளார். அப்போது அவர் வீசிய பந்து சுனில் மார்பின் மீது வேகமாக பட்டுள்ளது. சுனில் உடனடியாக மார்பை பிடித்துக் கொண்டு கீழே மயங்கி விழுந்துள்ளார்.

அங்கிருந்த மக்கள் உடனடியாக அவரை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி செய்து பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சில் செல்லும் போது சுனில் துருத்தஷ்ட வசமாக உயிரிழந்துள்ளார்.

உடனடியாக அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்