என்னால் மறக்க முடியாத அனுபவம் அது... பாகிஸ்தான் தாக்குதல் பற்றி மனம் திறந்த சங்ககாரா!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பயங்கரவாதிகளால் இலங்கை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தன்னால் மறக்க முடியாத சம்பவம் என சங்ககாரா பேசியுள்ளார்.

2009-ல் பாகிஸ்தானுடனான டெஸ்ட் போட்டிக்காக இலங்கை அணி லாகூரின் கடாபி ஸ்டேடியத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, ​​தலிபான் மற்றும் லஷ்கர்-இ-ஜாங்வி அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் இலங்கை வீரர்கள் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.

இதில் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் என 7 பேர் கொல்லப்பட்டதோடு, இலங்கை வீரர்கள் சிலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்திலிருந்து, எந்த கிரிக்கெட் அணியும் ஒரு கிரிக்கெட் தொடரை விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்யவில்லை. இருப்பினும், கடந்த ஆண்டு இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மீண்டும் பாகிஸ்தான் மீதான பார்வையை மாற்றியமைத்தது.

அதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அவர்களை தொடர்ந்து தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடன் பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் Lahore Qalandars அணிக்கெதிரான கிரிக்கெட் போட்டிக்காக, MCC அணியை வழிநடத்தி வந்திருக்கும் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்ககாரா கடந்த கால சம்பவங்கள் குறித்து மனம்திறந்துள்ளார்.

கடந்த காலத்தில் நடந்தவற்றை நான் நினைவுபடுத்த தேவையில்லை. ஏனென்றால் அந்த நாளையும் அந்த தருணங்களையும் நான் மிகவும் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறேன். ஒருபோதும் மறக்கக் கூடாத ஒரு அனுபவம். அந்த சம்பவம் தான் என்னுடைய குணம் மற்றும் மதிப்புகளை எனக்கு கற்றுக்கொடுத்தன.

இன்று நான் மீண்டும் லாகூருக்கு வர முடிந்ததை அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். அதே நேரத்தில் அன்றைய தினம் உயிர் இழந்த அனைவரின் தியாகத்தையும் நினைவில் கொள்கிறேன் என பேசியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்