குட்பை சொல்வது அவ்வளவு எளிதல்ல! உருக்கமாக விராட் கோஹ்லி மனைவி வெளியிட்ட புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

விராட் கோஹ்லியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ள புகைப்படம் சமூகவலைதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியும் அவரின் மனைவி அனுஷ்கா சர்மாவும் தங்கள் காதல் தருணங்களை அடிக்கடி புகைப்படமாக எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் கணவன் விராட் கோஹ்லியுடன் தான் எடுத்துக்கொண்ட செல்பி ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுஷ்கா சர்மா பதிவிட்டுள்ளார்.

அதில், குட்பை சொல்வது என்பது மிகவும் எளிதானதாக நீ நினைக்கலாம், ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு பகிரப்பட்ட இரண்டு மணிநேரங்களில் 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களையும் ஏராளமான கமெண்ட்டுகளையும் ரசிகர்களிடம் இருந்து வாங்கியுள்ளது.

அனுஷ்கா சர்மாவின் இந்த உருக்கமான பதிவிற்கு பலரும் பல்வேறு விதமான அர்த்தங்களை கூறி வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்