ஒருமுறை எங்களுக்காக தோற்றுவிடுங்கள் ப்ளீஸ்: லிவர்பூல் அணிக்கு கடிதம் எழுதிய மான்செஸ்டர் ரசிகர்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்
105Shares

பிரீமியர் லீக் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளை குவித்துவரும் லிவர்பூல் அணிக்கு மான்செஸ்டர் யுனைடெட் அணியின் குட்டி ரசிகர் ஒருவர் எழுதியுள்ள கடிதம் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

ஒரு போட்டியாவது தோற்க வேண்டும், எதிரணிகளுக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து லிவர்பூல் பயிற்சியாளர் Jürgen Klopp-வுக்கு 10 வயது கால்பந்து ரசிகர் தராக் கர்லி கடிதம் எழுதியுள்ளார்.

இதுவரை பல்வேறு போட்டிகளில் லிவர்பூல் வெற்றிபெற்றுள்ளது. மேலும் 9 போட்டிகளில் வெற்றிபெற்றால் அது வரலாற்றில் சாதனையாக அமையும்.

ஆனால் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ரசிகர் என்றமுறையில் இது தாங்குவதற்கும் மேலாக உள்ளது.

இந்த தொடர் முழுவதும் தோற்க வேண்டும் என்றோ, இனி வெற்றிபெற வேண்டும் என விளையாடக் கூடாது என்றோ தாம் குறிப்பிடவில்லை,

ஒரே ஒருமுறை மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன் தோற்றுவிடுங்கள் என்றே கேட்கிறேன் என தராக் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Photograph: North West Newspix

ஆனால் அப்படியான ஒரு விடயம் நடக்கும் என்று யோசிக்கவே வேண்டாம் எனவும், நடைமுறைக்கு சாத்தியமில்லை எனவும் லிவர்பூர் பயிற்சியாளர் Jürgen Klopp அந்த குட்டி ரசிகருக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

லிவர்பூல் தோற்க வேண்டும் என நீங்கள் ஆசைப்படுவதால், அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவே முடியாது எனவும் Jürgen Klopp குறிப்பிட்டுள்ளார்.

பிரீமியர் லீகில் லிவர்பூல் இதுவரை விளையாடிய 26 போட்டிகளில் 25-ல் வெற்றிவாகை சூடியதுடன், ஒரு போட்டியில் சமநிலை கண்டுள்ளது.

76 புள்ளிகளுடன் பட்டியலில் முன்னிலையில் உள்ளது லிவபூல் அணி.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்