உதை பந்தாட்டத்தின் போது சிறுவர்கள் பந்தினை தலையினால் அடிப்பதற்கு போட்டிகளில் தடை விதிக்கப்பட உள்ளது.
11 வயது மற்றும் அதற்கு கீழான வயதுடைய சிறுவர்கள் இவ்வாறு பந்தனை தலையினால் அடிப்பதற்கு தடை கொண்டுவரப்படவுள்ளது.
அதுமாத்திரமன்றி பயிற்சிகளின் போதும் தலையினால் பந்தை அடிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட உள்ளது.
Glasgow பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் போது தலையினால் பந்தை அடிக்கும் சிறார்கள் மூளை நோய்க்கு உட்பட்டு இறப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
இதனை அடுத்து இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் அயர்லாந்தில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
இதேவேளை இந்த தடையானது ஏனைய நாடுகளிலும் விரைவில் கொண்டுவரப்படும் என நம்பப்படுகிறது.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்