இலங்கையில் கிரிக்கெட் பார்க்க வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி! மதுபோதையில் நபர் செய்த செயலின் வீடியோ

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை-மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான 3வது ஒரு நாள் போட்டியின் போது குடிபோதையில் இருந்த ஒருவர் வெளிநாட்டவரை துன்புறுத்தும் வகையில் நடந்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியிலும் வெற்றிப்பெற்ற இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என கைப்பற்றி மேற்கிந்திய தீவுகள் அணியை ஒயிட் வாஷ் செய்தது.

இந்நிலையில், இக்கிரிக்கெட் போட்டியை காண வந்த வெளிநாட்டவரை உள்ளுர்வாசி ஒருவர் குடிபோதையில் துன்புறுத்திய காட்சி இணையத்தில் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

மதுபோதையிலிருந்த நபர் வெளிநாட்டு பெண்ணிடம் இது என் நாடு, என் நாடு என கூறி சங்கடத்திற்குள்ளாகியுள்ளார்.

அருகிலிருந்தவர்கள் யாரும் இதை தடுக்க முயற்சிக்கவில்லை என்பது வருத்தமளிப்பதாக நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, சூரியவேவா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகள் மோதிய இரண்டாவது ஒரு நாள் போட்டியின் போது, மைதானத்தின் நுழைவு வாயிலில் ரசிகர்கள் மீது பொலிசார் தாக்குதல் நடத்திய சம்பவமும் சர்ச்சை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்