போலி பாஸ்போர்ட்டுடன் வெளிநாட்டில் கால்பந்து உச்ச நட்சத்திரம் ரொனால்டினோ கைது!

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

போலி பாஸ்போர்டுடன் பராகுவே நாட்டிற்குள் நுழைந்ததற்காக பிரபல கால்பந்து வீரர் ரொனால்டினோ அந்த நாட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

தென் அமெரிக்க நாடான பராகுவேவில் நுழைய தவறான ஆவணங்களைப் பயன்படுத்தியதாக ரொனால்டினோ மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரையும் பொலிசார் கைது செய்த போதும், காவல் நிலையம் அழைத்து செல்லவில்லை என்றும், நேரடியாக உரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ள வாய்ப்பளித்துள்ளனர்.

ரொனால்டினோ சகோதரர்களுடன் வந்த ஒரு நபர் அவர்களை ஏமாற்றியதாகவும், அந்த நபரை பின்னர் பொலிசார் கைது செய்துள்ளதாகவும், அவர் தற்போது விசாரணையில் ஒத்துழைக்கிறார் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலின் சிறந்த கால்பந்தாட்ட வீரரான ரொனால்டினோ 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான ஃபிஃபா விருதினையும், 2005 ஆம் ஆண்டு பாலோன் டி'ஓர் விருதையும் வென்றவர். மட்டுமின்றி பிரேசில் தேசிய கால்பந்து அணி 2002 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வெல்ல காரணமாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்