என் சகோதரன் இறந்து 25 வருடங்கள் ஆகிவிட்டன: ஜெயவர்தனாவின் உருக்கமான பதிவு!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான மகேலா ஜெயவர்தனா 25 வருடங்களுக்கு முன் இறந்த தனது சகோதரன் பற்றிய உணர்ச்சிபூர்வமான குறிப்பைப் பகிர்ந்துள்ளார்.

நாலந்தா கல்லூரியின் சார்பாக 1994 ஆம் ஆண்டில் மகேலா ஜெயவர்தனா, 'சிறந்த பள்ளி மாணவர் கிரிக்கெட்' விருதை வென்ற சில மாதங்களுக்குப் பிறகு, 1995 ஆம் ஆண்டில் அவர் தனது வாழ்க்கையில் மிகப்பெரிய பின்னடைவை அனுபவித்தார்.

ஏனெனில் அவரது அன்பு சகோதரர் திஷால் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளிவந்தது.

சிகிச்சைக்கு தேவையான வசதிகள் இலங்கையில் இல்லை என்ற உண்மையை அறிந்த மகேலாவின் தந்தை செனரத் ஜெயவர்தனா, திஷாலை சிகிச்சைக்காக பிரித்தானியாவிற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் கூட, 16 வயதிலேயே திஷால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் மேலதிக சிகிச்சைகள் வெற்றிபெறவில்லை.

தனது மூத்த சகோதரனை போல, திஷால் இளம் வயதிலே இடது கை பேட்ஸ்மேனாக சிறப்பாக விளையாடி வந்தார். சகோதரன் என்பதை தாண்டி கிரிக்கெட் வாழ்க்கையில் மகேலாவிற்கு நல்ல தோழமையாக இருந்து வந்தார்.

மகேலாவைப் பொறுத்தவரை, திஷால் அவரை விட சிறந்த வீரர் ஆவார்.

அவருடைய நினைவாகவே மகேலா அடிக்கடி புற்றுநோய் சிகிச்சை மையங்களுக்கான நிதி திரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் கூட, கராபிட்டியாவில் உள்ள ஒரு புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி திரட்டுவதற்காக பாயிண்ட் பருத்தித்துறை முதல் டோண்ட்ரா ஹெட் வரை நடைப்பயணத்தில் பங்கேற்றார்.

இந்த நிலையில் திஷால் ஜெயவர்தனாவின் 25 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், மகேலாவும் அவரது குடும்பத்தினரும் மத சடங்குகளை செய்தனர்.

இதுகுறித்து அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “நான் எனது சகோதரனை இழந்து 25 வருடங்கள் ஆகின்றன. இந்த ஆண்டுகளில் எனது பெற்றோர் எனக்கு மிகவும் வலிமையாக இருந்தனர் என்பதை ஒப்புக்கொள்ள விரும்புகிறேன். தொடர்ந்து எனக்கு ஊக்கமளித்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்