கொரோனா அச்சுறுத்தல்: ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு? சிக்கலில் ஜப்பான்

Report Print Abisha in ஏனைய விளையாட்டுக்கள்

டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டால், ஜப்பான் பொருளாதார சிக்கலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜுலை மாதம் தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டி ஜப்பான் நகரம் டோக்கியோவில் நடைபெற உள்ளதாக இருந்தது. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் உலகம் முழுவதும் மிரட்டி வருவதால், ஒலிம்பிக் போட்டிகள் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது வரை 4ஆயிரத்திற்கு அதிகமானோர் கொரோனாவால் பலியாகியுள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டிகள் பார்வையாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் நலன் கருதி நிறுத்தி வைப்பது குறித்து ஒலிம்பிக் கமிட்டி ஆலோசித்து வருகிறது.

ஒருவேளை நிறுத்தி வைக்கப்பட்டால், ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் போட்டி நடைபெறாது. இதற்கு முன்னதாக உலகப்போரின் போது ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. ஒலிம்பிக் போட்டிகள் ரத்தானால், ஜப்பான் மிகப்பெரிய பொருளாதார சரிவை சந்திக்கும் என்று கூறப்படுகிறது. 35ஆண்டுகளில் முதல் முறையாக பார்வையாளர் இல்லாமல் ஒலிம்பிக் ஜோதி நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்