நியூசிலாந்து வீரருக்கு கொரோனா தொற்றா? தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்
#S

நியூசிலாந்து அணி வீரரான பெர்குசன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று சிட்னியில் நடந்தது.

கொரோனா அச்சத்தால் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஆரவாரம் ஏதுமின்றி போட்டி நடந்து முடிந்தது.

இப்போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணி வீரரான லூக்கி பெர்குசன் தொண்டை வலியால் அவதிப்பட்டு வருகிறார்.

இதனையடுத்து கொரோனா தொற்றா என கண்டறிய சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பாதிப்பு ஏதுமில்லை என தெரிந்த பின்னர் அணியுடன் இணைய அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்