2020 ஒலிம்பிக் நடக்குமா? பிரதமர் முக்கிய அறிவிப்பு.. ஜனாதிபதி டிரம்ப் மகிழ்ச்சி

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

டோக்கியோ ஒலிம்பிக் 2020 திட்டமிட்ட படி நடைபெறும் என்று ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே உறுதிப்படுத்தினார்.

கொடிய கொரோனா வைரஸ் சமீபத்தில் உலக சுகாதார அமைப்பால் உலகளாவிய தொற்றுநோயாக அடையாளம் காணப்பட்டது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி 5,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸால் உலகெங்கிலும் உள்ள பல முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, 2020 டோக்கியோ ஒலிம்பிக் திட்டமிட்ட படி நடைபெறும் என்று உறுதியளித்தார்.

ஒலிம்பிக் திட்டமிட்ட படி நடைபெறும். ஒலிம்பிக்கை வெற்றிகரமாக நடத்துவதற்கு நாங்கள் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

நாங்கள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் உலக சுகாதார அமைப்பு உடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். ஐ.ஓ.சி உட்பட மற்ற பங்குதாரர்களுடன் நாங்கள் தொடர்பு கொண்டோம், நாங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம், என்று அபே கூறினார்.

முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜூலை 24 துவங்கவிருக்கும் ஒலிம்பிக் 2020ஐ ஒத்திவைக்க பரிந்துரைத்திருந்தார்.

ஜப்பானில் பார்வையாளர்களின்றி ஒலிம்பிக்கை நடத்துவதை விட அடுத்த ஆண்டு நடத்த விரும்புவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.

நாங்கள் ஒலிம்பிக்கை வெற்றிகரமாக நடத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்று டிரம்பிடம் கூறியுள்ளோம்,

ஜப்பான் செயல்படும் வெளிப்படைத்தன்மை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக டிரம்ப் பதிலளித்தார் என ஜப்பான் ஷின்சோ அபே கூறினார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்