ஜாக்கிரதையாக இருங்கள்! பயம் நமக்கு உதவாது: கொரோனா குறித்து இலங்கை அணித்தலைவரின் பதிவு

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
239Shares

உலகையே கொரோனா வைரஸ் பீதியில் ஆழ்த்தியுள்ள நிலையில் அதிலிருந்து தப்பிக்க கடைபிடிக்க வேண்டிய அடிப்படை விடயங்கள் குறித்து இலங்கை அணித்தலைவர் திமுத் கருணரத்னே பதிவிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணரத்னே தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனா தொடர்பில் முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதில், வெளியிடங்களுக்கு செல்கிறவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அடிப்படை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு நிச்சயமாக நம் ஒவ்வொருவருக்கும் உதவும்.

அதன்படி கைகளை கழுவுங்கள், பாதுகாப்பாகவும், அமைதியாகவும் அதே சமயம் ஜாக்கிரதையாகவும் இருங்கள். கொரோனா விடயத்தில் அச்சமடைந்தால் அது நிச்சயம் நமக்கு உதவாது என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்