பிரபல என்பிஏ வீரருக்கு கொரோனா..! சோகத்தில் ரசிகர்கள்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து வீரர் கெவின் டுராண்ட்க்கு கொரோனா வைரஸ் உறுதியானது.

என்பிஏ லீக்கில் கடந்த 3 சீசனில் கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் அணியில் விளையாடி வந்த கெவின் டுராண்ட், தற்போது புரூக்ளின் நெட்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

நான் நன்றாக இருக்கிறான், எல்லோரும் கவனமாக இருங்கள், உங்களை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் என கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டுராண்ட் தெரிவித்துள்ளார்.

டுராண்ட்-ன் புரூக்ளின் நெட்ஸ் அணி வீரர்கள் 3 பேருக்கு கொரோனா உறுதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட வீரர்களின் பெயரை அணி வெளியிடவில்லை.

டுராண்ட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செய்தி கூடைப்பந்து ரசிகர்கள் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் மீண்டு வர வேண்டும் என பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது, 6,522 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்