கொரோனா வைரஸ் பாதித்த முதல் சர்வதேச கிரிக்கெட் வீரர்! அவரின் உருக்கமான பதிவு

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

முதன் முறையாக ஒரு கிரிக்கெட் வீரர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது உறுதியாகியுள்ளது.

ஸ்காட்லாந்து கிரிக்கெட் வீரர் மஜித் ஹக்-குக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல கிரிக்கெட் வீரர்கள் ஏற்கனவே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கும் நிலையில் முதல் வீரராக மஜித் பாதிக்கப்பட்டுள்ளார்.

37 வயதான ஸ்காட்லாந்து கிரிக்கெட் வீரர் மஜித் ஹக் கடந்த 2006இல் இருந்து 2015ஆம் ஆண்டு வரை ஸ்காட்லாந்து தேசிய கிரிக்கெட் அணியில் ஆடினார். இவர் சுழற் பந்துவீச்சாளர் ஆவார்.

இவர் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கிளாஸ்கோ பகுதியில் இருக்கும், ராயல் அலெக்சாண்ட்ரா மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார்.

மஜித்துக்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும் அவர் விரைவில் வீடு திரும்ப உள்ளதாக கூறினார். மருத்துவமனை ஊழியர்கள் தன்னை சிறப்பாக கவனித்துக் கொண்டதாகவும், தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் டுவிட்டரில் நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இதனிடையில் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்