முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்ட குமார் சங்ககாரா

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சங்ககாரா முன்னெச்சரிக்கை காரணமாக தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

சீனா மற்றும் ஈரானுக்கு அடுத்தப்படியாக ஐரோப்பா நாடுகள் கொரோனா வைரசுக்கு அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டின் எல்லைகளை மூடிவிட்டன.

கடந்த வாரத்தில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து திரும்பியவர்கள் பொலிசில் தங்களுடைய தகவல்களை பதிவு செய்ய வேண்டும் எனவும் அதன்பின் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இலங்கை அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் இங்கிலாந்தில் இருந்து இலங்கை திரும்பிய கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சங்ககாரா கூறுகையில் எனக்கு கொரோனா நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லை. அதுபோன்ற ஏதும் இல்லை என்றாலும், நான் அரசின் வழிமுறைகளை கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் கடந்த ஒருவாரத்திற்கு முன் லண்டனில் இருந்து இலங்கை திரும்பினேன்.

மார்ச் 1ம் திகதியில் இருந்து 15ம் திகதி வரைக்கும் வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பியர்கள் பொலிசில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அத்துடன் அவர்களை அவர்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நான் எனது பெயரை பதிவு செய்ததோடு என்னை நானே தனிமைப்படுத்தி கொண்டேன். இந்த கொரோனா வைரசால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்