சீனாவில் நாயை உயிரோடு சமைப்பதை பார்த்து கொந்தளித்த பிரபல கிரிக்கெட் வீரர்! காட்டமான பதிவு

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

சீனாவில் நாய் உயிருடன் சமைக்கப்படும் வீடியோவை பார்த்து கோபமடைந்துள்ள பிரபல கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் அது தொடர்பாக காட்டமாக பதிவிட்டுள்ளார்.

உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் தொடங்கியது.

அதிலும், சீனாவில் விலங்குகள் கொல்லப்பட்டு உணவாக விற்கப்படும் இடத்திலிருந்து தான் கொரோனா முதன் முதலில் பரவியதாக கூறப்பட்டது.

இந்த சூழலில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கெவின் பீட்டர்சன் சீனாவின் உணவு முறை தொடர்பாக கோபமாக ஒரு பதிவை டுவிட்டரில் வெளியிட்டார்.

அதில், சீனாவில் உள்ள மார்க்கெட்டில் சுடு தண்ணீரில் நாய் ஒன்று உயிரோடு உணவாக சமைக்கப்படும் வீடியோ எனக்கு வந்தது.

இப்போது பாருங்கள், உலகம் முழுவதுமே மக்கள் தங்கள் வீடுகளுக்குள் அடைபட்டுக்கிடக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

அதாவது இது போன்ற விலங்குகளை சாப்பிட்டு சீனர்கள் கொரோனா தொற்றை மற்ற நாடுகளுக்கும் பரப்பிவிட்டார்கள் என கெவின் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்