டோக்கியோ ஒலிம்பிக் ஒத்திவைப்பு..! ஜப்பான் பிரதமர்-சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

2020 ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக்கை ஒத்திவைக்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் ஜப்பான் பிரமர் ஆகியோர் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் அனைத்து வினையாட்டு நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளது.

2020 டோக்கியோ ஒலிம்பிக் நடைபெறுமா என்பது தெளிவாக தெரியாத நிலையில் வீரர்களின் நலன் கருதி பல நாடுகள் உள்நாட்டு விளையாட்டு மைதானங்கள் மந்றும் பயிற்சி மையங்களை மூடியுள்ளன.

ஜப்பானில் கொரோனாவிற்கு 42 பேர் பலியாகியுள்ள நிலையில் 1,140 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2020 டோக்கியோ ஒலிம்பிக் திட்டமிட்ட படி நடத்துவது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) தலைவர் தாமஸ் பாக் உடன் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பேச்சுவார்த்தை நடத்தினார்,

அமைப்பாளர்களுடனான பேச்சுவார்த்தையின் போது டோக்கியோ ஒலிம்பிக்கை ஒரு வருடம் ஒத்திவைக்குமாறு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கேட்டுக் கொண்டார்.

மேலும் கொரோனாவை எதிர்த்துப் போராடுவதால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக இந்த ஆண்டு 2020 ஒலிம்பிக் நடைபெற முடியாவிட்டால் ஒத்திவைப்பது தவிர்க்க முடியாதது என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த நான்கு வாரங்களில் ஒலிம்பிக் நடத்துவது குறித்து முடிவெடுப்பதாக ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது. எனினும், டோக்கியா ஒலிம்பிக்கை 2021 கோடை காலத்திற்கு ஒத்திவைக்க இரு தரப்பினரும் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்