கொரோனாவால் தவிக்கும் ஏழை குடும்பங்கள்! டோனி செய்த வித்தியாசமான உதவி

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்
888Shares

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு இருக்கும் நிலையில், ஏழை குடும்பங்களுக்கு உதவுவதற்காக டோனி ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலின் தீவிரத்தை குறைப்பதற்காக, நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்தார். இந்தியாவில் மஹாராஷ்ட்டிரா மற்றும் கேரளா கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளன.

இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான டோனி, புனேவில் இருக்கும் 1000 குடும்பங்களுக்கு உதவுவதற்காக டோனி 1 லட்சம் ரூபாய் நேற்று கொடுத்து உதவியுள்ளார்.

இதை அவர், தொண்டு திரட்டும் Ketto வலைதளத்தின் மூலம், புனேவில் உள்ள ஒரு பொது தொண்டு நிறுவனமான Mukul Madhav அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். டோனி இதன் மூலம் கொடுத்து உதவியுள்ளதால், இதைக் கண்டு பலரும், இந்த அறக்கட்டளைக்கு உதவுவர், இது ஒரு வித்தியாசமான உதவி என்று இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

மேலும்தினசரி கூலித் தொழிலாளர்கள், இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக சிரமப்பட்டு வருவதால், டோனியின் இந்த உதவி, புனேவில் இருக்கும் தினசரி கூலித் தொழிலாளர்களின், ஏழை குடும்பங்களுக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோனி மட்டுமின்றி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான் ஆகியோர் 4,000 க்கும் மேற்பட்ட முகமூடிகளை நன்கொடையாக வழங்கியுள்ளனர். கவுதம் காம்பீர் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு 50 லட்சம் ரூபாய் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்