கொரோனா ஊரடங்கின் போது வெளியில் வந்தால்.... வீடியோ வெளியிட்டு எச்சரித்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

கொரோனா ஆபத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கை மீறி மக்கள் வெளியில் வந்தால் ஆபத்து ஏற்படும் என கூறும் வகையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஜடேஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதுவரை தினமும் ஒன்றிரண்டு பேர், பத்து, இருபது பேர் என பாதிப்புக்கு உள்ளாகும் மக்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்தது. ஆனால், தற்போது 90, 100 என உயர்ந்து வருகிறது.

இதுவரை இந்தியாவில் 900த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை வேகமாக உயரலாம் என்ற அச்சம் உள்ளது. அதன் காரணமாகவே, கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனாலும் பலரும் வெளியே சுற்றி வருகின்றனர். அவர்களுக்கு கொரோனா பரவும் ஆபத்து உள்ளது. ஆனாலும், அவர்கள் அதை உணர்வதில்லை. அதுகுறித்து ஜடேஜா ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் ஜடேஜா சிறப்பான ரன் அவுட் ஒன்றை செய்து இருந்தார். உஸ்மான் கவாஜா ஜடேஜா பக்கம் பந்தை அடித்து விட்டு ரன் ஓடுகிறார்.

எளிதாக ஒரு ரன் ஓடும் வாய்ப்பும் உள்ளது. ஜடேஜா அசத்தல் ஆனால், ஜடேஜா மின்னல் வேகத்தில் பந்தை எறிந்து அவரை ரன் அவுட் செய்தார். உலகின் சிறந்த பீல்டர்களில் ஒருவராக கருதப்படும் ஜடேஜா, அந்த ரன் அவுட்டுக்காக பாராட்டப்பட்டார்.

அந்த வீடியோவைத் தான் பகிர்ந்துள்ளார். அதை பதிவிட்டு ஊரடங்கை மீறுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்ஸ்டாகிராம் பதிவு அந்த பதிவின் கீழ் "பாதுகாப்பாக இருங்கள். வீட்டிலேயே இருங்கள். இல்லையெனில் ரன் அவுட் ஆகி விடுவீர்கள்" என எச்சரிக்கும் விதமாக கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்