கொரோனாவில் இருந்து மீண்டது எப்படி? நான் கண்ட சாதாரண அறிகுறிகள்! கால்பந்து வீரரின் எச்சரிக்கை தகவல்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இத்தாலியின் யுவென்டஸ் அணிக்காக விளையாடி வந்த அர்ஜென்டினா வீரர் பவுலோ டைபாலா, வீட்டிலேயே இருங்கள் என்பது பொய் அல்ல, கொரோனா விஷயத்தில் மிகவும் கவனமாக இருங்கள் என்று எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோய் காரணமாக, உலக நாடுகள் அஞ்சி நடுங்கி வருகின்றன. இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக இத்தாலியில் பலியானோரின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், இத்தாலியின் செரி ஏ கால்பந்து லீக் அணியான யுவென்டஸ்க்காக விளையாடி வருபவர் அர்ஜென்டினாவின் இளம் வீரர் பவுலோ டைபாலா.

இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது கொரோனாவில் இருந்து தப்பியுள்ள இவர், அதில் இருந்து கொஞ்சம் கவனமாக இருங்கள் என்று எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு நாட்களும் ஏராளமான மக்கள் மடிந்து வருகிறார்கள். விஷயம் மிகவும் மோசமாகி வருகிறது. உங்களால் கையாள முடியவில்லை என்பதால்தான் ஏராளமான நாடுகள் மருத்துவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.

கொரேனா வைரசால் பாதிக்கப்படுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. வீட்டுக்குள்ளேயே தங்கியிருங்கள் என்ற வார்த்தை பொய்யல்லை. மிகவும் கவனமாக இருங்கள்.

எனக்கு மோசமான இருமல் இருந்தது, தூங்கும்போது மிகவும் சோர்வாக இருந்தேன். குளிராக இருப்பது போன்று உணர்ந்தேன்.

முதலில் இது என்னவாக இருக்கும் என்பது குறித்து நினைக்கவில்லை. ஆனால், முதலில் எனது அணியில் உள்ள சக வீரர்கள் இருவருக்கு உறுதி செய்யப்பட்ட பிறகு, எனக்கு தொற்றிக் கொண்டது உறுதியானது

எங்களுக்கு தலைவலி இருந்தது. ஆனால், எதையும் நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. கிளப் எங்களுக்கு விட்டமின்கள் கொடுத்தது. அதன்பின் நாங்கள் குணமடைந்து வந்ததை உணர்ந்தோம்.

இது மனநிலையை பொறுத்தது. முதலில் பயமாக இருந்தது. தற்போது சரியாகி விட்டது. தற்போது எங்களுக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை.

நான் வேகமாக சோர்வடைந்தேன். பயிற்சி எடுக்க விரும்பினேன். ஆனால், ஐந்து நிமிடத்திற்கு பிறகு மூச்சு விட திணறினேன். அப்போதுதான் எங்களுக்கு ஏதோ ஒன்று சரியில்லை என்பது தெரியவந்தது. அதன்பின் பரிசோதனையில் நேர்மறையான முடிவு வந்ததாக கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்