இலங்கை- தென் ஆப்பிரிக்கா தொடரும் ரத்தாகுமா? கிரேம் ஸ்மித் சொல்வது என்ன?

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்

கொரோனா வைரசின் காரணமாக உள்ளூர் மற்றும் சர்வதேச தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் வீரர்கள் தங்களுக்கு பிடித்தமான வேலைகளை செய்து பொழுதை கழித்து வருகின்றனர்.

பலரும் தங்களால் இயன்றளவுக்கு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் வீடியோக்கள், புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால இயக்குனர் கிரேம் ஸ்மித், கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வந்தாலும் போட்டிகளுக்கு வீரர்கள் தயாராக சுமார் 6 வாரங்கள் தேவைப்படும் என தெரிவித்துள்ளார்.

ஸ்மித் சொல்வதை பார்த்தால் வருகிற யூன் மாதம் நடைபெறவிருக்கும் இலங்கை- தென் ஆப்பிரிக்கா தொடரும் ரத்தாகலாம் என தெரிகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்