அதிர்ஷ்டசாலி நான்! மனைவி குறித்து நெகிழ்ந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர்... வெளியிட்ட திருமணநாள் புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் சண்டிமால் இன்று தனது திருமண நாளை கொண்டாடும் நிலையில் மனைவி குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் தினேஷ் சண்டிமால். இவர் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராகவும் பல போட்டிகளில் செயல்பட்டுள்ளார்.

சண்டிமாலின் மனைவி பெயர் இசிகா ஜெயசேகரா. இந்த அழகான தம்பதி இன்று தங்களது திருமண நாளை கொண்டாடுகின்றனர்.

இது குறித்து தினேஷ் சண்டிமால் டுவிட்டரில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஒரு உருக்கமான பதிவையும் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், உன்னை என் அருகில் வைத்திருக்கும் அதிர்ஷ்டசாலி நான். என் சிறந்த தோழியான உன்னுடன் தினமும் நேரத்தை செலவிடுவது மகிழ்ச்சி.

உனக்கும் எனக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்