அச்சம்பவத்தின் போது!... நியூசிலாந்து வீரர்கள் கண்ணீர் சிந்தியதை பார்த்தேன்- இன்சமாம் உல் ஹக்

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்

கராச்சியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது ஹொட்டலில் தங்கியிருந்த நியூசிலாந்து வீரர்கள் கண்ணீர் சிந்தியதை பார்த்ததாக தெரிவித்துள்ளார் இன்சமாம் உல் ஹக்.

நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி 2002-ல் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.

முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் நடைபெற்ற நிலையில் 2வது டெஸ்ட் கராச்சியில் நடைபெறுவதாக இருந்தது.

இதற்காக இரு அணி வீரர்களும் ஹொட்டலில் தங்கியிருந்தனர், அப்போது நடந்த குண்டுவெடிப்பில் ஹொட்டலில் கண்ணாடிகள் நொறுங்கின.

இதுபற்றி தற்போது நினைவுகூர்ந்துள்ள இன்சமாம் உல் ஹக், நான் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததை பார்த்துக் கொண்டிருந்த போது பொலிசார் அதிகாரி ஒருவர் என்னிடம் வந்து, குண்டுவெடிப்பு நடந்துள்ளது, உடனடியாக கீழே இறங்குங்கள் என்றார்.

நான் படிக்கட்டு வழியாக கீழே இறங்கி வந்தேன். அப்போது நீச்சல் குளம் அருகில் நியூசிலாந்து வீரர்கள் அழுது கொண்டு இருப்பதை நான் பார்த்தேன்.

எந்தவொரு வீரருக்கும் காயம் ஏற்படவில்லை, இதனால் கடவுளுக்கு நன்றி சொல்லியாக வேண்டும், அது பயங்கரமான நாள்.

நியூசிலாந்து வீரர்கள் உடனடியாக தொடரை ரத்து செய்து கொண்டு சொந்த நாடு திரும்பினார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்