தந்தையானார், மின்னல்வேக வீரர் உசேன் போல்ட்

Report Print Abisha in ஏனைய விளையாட்டுக்கள்

தடகள உலகில் 10 ஆண்டுகள் கொடி கட்டி பறந்த ஜமைக்காவின் உசேன் போல்டுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஜமைக்காவின் வீரர் உசேன் போல்ட், 100 மீற்றர் ஓட்டத்தில் 9.58 வினாடிகளில் இலக்கை கடந்து உலக சாதனை படைத்தவர்.

ஒலிம்பிக்கில் 8 தங்கப்பதக்கமும், உலக தடகளபோட்டியில் 11 தங்கமும் கைபற்றி வரலாறு படைத்தவர் உசேன்போல்ட்

2017-ல் இவர் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார்

மின்னல்வேக மனிதராக வலம் வந்த 33 வயதான உசேன் போல்ட், தனது காதலி 30 வயதான காசி பென்னட்டும் இணைந்து வாழ்ந்து வந்தனர். இதில் கர்ப்பமான காசி பென்னட்டுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

தந்தை அந்தஸ்தை எட்டிய உசேன் போல்ட்டுக்கு ஜமைக்கா பிரதமர் ஆன்ட்ரூ ஹோல்னெஸ் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்