அந்த பூட்ஸ் கால் நாளை என்னுடைய கழுத்திலும்... பிரபல வீரரின் ஆதங்க பதிவு

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்

அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதற்கு எதிராக உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

அமெரிக்காவின் ஜார்ஜின் கொலைக்கு நீதி கேட்டு தொடங்கிய போராட்டம் தற்போது நிறவெறிக்கு எதிரான போராட்டமாக மாறியுள்ளது.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் அணித்தலைவரான டேரன் சமி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் கிரிக்கெட் சங்கங்கள் தங்களது கண்டனத்தை பதிவிட வேண்டுமென்று கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், உலகம் முழுவதுமே நிறவெறி இருக்கிறது, என் சகோதரன் தொண்டையில் பூட்ஸ் கால் வீடியோவை பார்த்த பின்னரும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் அமைதி காப்பது ஏன்?

எங்களுக்கான, கருப்பின மக்களுக்காக நீதி கேட்கமாட்டீர்களா? அநீதியை தட்டிக்கேட்க மாட்டீர்களா?

இது மவுனத்துக்கான நேரமல்ல, உங்களது குரல்களை நான் கேட்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்