சொகுசு காரை விற்கிறேன்! காரணம் என்ன? நாட்டுக்கு பெருமை சேர்த்த இளம் வீராங்கனை விளக்கம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
649Shares

இளம் ஓட்டப்பந்தய வீராங்கனையான டுட்டீ சந்த் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி பயிற்சிக்கு நிதி திரட்டும் வகையில் தனது காரை விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்த நிலையில் அது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனையாளரான ஒடிசாவை சேர்ந்த 24 வயது டுட்டீ சந்த் சமீபத்தில் வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவில் ‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டி பயிற்சிக்கு நிதி திரட்டும் வகையில் தனது காரை விற்பனை செய்ய இருப்பதாகவும், அதனை வாங்க விரும்புபவர்கள் தனது மானேஜரை தொடர்பு கொள்ளலாம்’ என்றும் தெரிவித்து இருந்தார். பின்னர் அந்த பதிவை நீக்கி விட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், சொகுசு காரை பராமரிக்க முடியவில்லை என்பதால் தான் விற்கப் போவதாக அறிவித்தேன். எனது பயிற்சிக்கு பணம் தேவைப்படுவதால் விற்பதாக ஒருபோதும் கூறவில்லை. எனது கருத்து திரிக்கப்பட்டு இருக்கிறது.

ஒடிசா அரசும், கே.ஐ.ஐ.டி. பல்கலைக்கழகமும் எனக்கு எப்பொழுதும் ஆதரவு அளித்து வருகின்றன. ஆனாலும் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக மிக அதிகமாக செலவாகும் என்பதை மறுக்க முடியாது.

தற்போது காரை விற்று கிடைக்கும் பணத்தை பயிற்சிக்கு பயன்படுத்தி விட்டு கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு அரசு தரும் பணத்தை வைத்து புதிய கார் வாங்கலாம் என்று நினைத்தேன். எனக்கு நிதி பற்றாக்குறை இருப்பதாக நான் ஒருபோதும் சொல்லவில்லை’ என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்