தினக்கூலியாக பணியாற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்! இந்த பரிதாப நிலைக்கு காரணம் என்ன?

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் மாற்றுத் திறனாளியுமான ராஜேந்திர சிங் தாமி தன் வாழ்வாதாரத்திற்காக தினக்கூலியாகப் பணியாற்றுவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜேந்திர சிங் தாமி, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தினக்கூலியாகப் பணியாற்றுகிறார்.

இது தொடர்பாக தாமிஅளித்துள்ள பேட்டியில், ஒரு கிரிக்கெட் தொடர் இருந்தது, ஆனால் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

அதனால் வேறு வழியில்லாமல் என் தகுதிக்கேற்ப ஏதாவது வேலை கொடுங்கள் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்.

இதனையடுத்து உத்தராகண்ட் மாநில பிதோராகர் மாவட்ட மேஜிஸ்ட்ரேட் விஜயகுமார் ஜோக்தாந்தே, மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தாமிக்கு பண உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

தாமி தற்போது உத்தராகண்ட் வீல்சேர் அணியின் கேப்டனாவார், முடக்கு வாதத்தினால் இவர் 90% திறனை இழந்த நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்