என் மனைவியை மட்டும் நான் பார்க்காமல் போயிருந்தால்.. உருக்கமாக பேசியுள்ள இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
878Shares

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தனது மனைவி அனுஷ்கா சர்மா குறித்து மனம் திறந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான மயான்க் அகர்வாலுடன், காணொலி மூலம் உரையாடல் நிகழ்த்திய கோஹ்லி, உருக்கத்துடன் பேசினார்.

தன் மனைவி அனுஷ்கா பற்றி கோஹ்லி பேசுகையில், என் வாழ்க்கையை நான் பரந்துப்பட்ட பார்வையில் பார்ப்பதற்கு முழுக் காரணமும் அனுஷ்காதான்.

அவருக்குத்தான் முழுப் பெருமையும் சேர வேண்டும். அவர் என் துணைவியாக இருப்பதற்கு பாக்கியம் செய்திருக்க வேண்டும். ஒரு கிரிக்கெட் வீரராக, ஒரு மனிதராக எனது பொறுப்புகளைப் புரிய வைத்தவர் அவர்.

என்னைப் பின் தொடர்பவர்களுக்கு எப்படிப்பட்ட முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதை அவர்தான் எனக்கு விளங்க வைத்தார். அனுஷ்காவிடமிருந்துதான் இவை அனைத்தையும் கற்றுக் கொண்டேன்

என் மனைவி அனுஷ்காவை நான் பார்க்காமல் போயிருந்தால், இப்படியெல்லாம் மாறியிருக்க மாட்டேன். ஏனென்றால் பொதுவாகவே நான் மிகவும் கறாரான, வெளிப்படைத்தன்மையற்ற மனிதன்தான். அதை அவர்தான் மாற்றினார். என் வாழ்க்கையும் அதனால் நன்றாக மாறியது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்