அறிகுறிகளே இல்லாமல் 5 முறை கொரோனா பாதிப்பு!.. பிரபல வீரருக்கு வந்த மகிழ்ச்சியான செய்தி

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்

அறிகுறிகள் ஏதுமின்றி 5 முறை கொரோனா உறுதியான பிரபல பாகிஸ்தான் வீரரான ஹாரிஸ் ராஃப் அப்பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்.

ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது.

இவ்விரு அணிகளும் மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளன.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் உட்பட அனைவருக்கும் இருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

முதல் முறை சோதனை செய்த போது 10 வீரர்கள் கொரோனா உறுதியானதால் அவர்கள் இங்கிலாந்து செல்லவில்லை.

மறுபடியும் சோதனை செய்ததில் 6 பேருக்கு நெகடிவ் என வந்ததால் இங்கிலாந்து சென்றனர், மீதமிருந்த நால்வரில் மூவருக்கு குணமாகி இங்கிலாந்து சென்றனர்.

சுழற்பந்து வீச்சாளரான ஹாரிஸ் மட்டும் குணமாகாமல் இருந்தார், அறிகுறிகள் ஏதும் இல்லாமலே ஐந்து முறை பரிசோதனையில் பாஸிட்டிவ் என வரவும் நொந்து போனார்.

இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட சோதனையில் நெகடிவ் என வந்துள்ளது, எனவே விரைவில் இங்கிலாந்துக்கு செல்லவிருக்கிறார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்