இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் டாப் 5 அழகான மற்றும் ஸ்டைலான மனைவிகளை தெரியுமா? புகைப்படங்களுடன்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பற்றி தகவல் தெரிந்து கொள்வதில் ரசிகர்களின் ஆர்வம் எல்லை இல்லாதது.

அதேசமயம், ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்களுக்கு பக்கபலமாக நிற்கும் அவர்களது மனைவிகள் குறித்தும் தெரிந்து வைத்திருப்பார்கள்.

ஆனால், சாக்ஷி டோனி, அனுஷ்கா கோஹ்லி போன்ற வைரல் ஹிட் மனைவிகள் குறித்து தெரிந்த அளவுக்கு மற்ற வீரர்களின் மனைவிகள் குறித்து தெரிந்து வைத்திருப்பதில்லை. தெரிவதும் இல்லை.

இந்நாள் இந்திய வீரர்களின் மனைவிமார்கள் குறித்த தகவல் புகைப்படங்களுடன் இதோ,

ஹேசல் கீச்

அஜித்தின் பில்லா படத்தில் நடித்த நாயகி தான் யுவராஜ் சிங்கின் மனைவி ஹேசல் கீச். இங்கிலாந்தின் பிறந்த வளர்ந்த ஹேசல், 2016ல் யுவியை திருமணம் செய்து கொண்டார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட போதே, தனது பெயரை ‘குர்பாஸந்த் கவுர்’ என்று மாற்றிக் கொண்டார்.

நடாஷா ஸ்டான்கோவிக்

நடாஷா ஸ்டான்கோவிக் எனும் மொடலை, கடந்த ஜனவரி 2ம் திகதி கடலில் ஒரு சிறிய படகில் வைத்து புரபோஸ் செய்து அந்த புகைப்படங்களை “Starting the year with my firework என்று வெளியிட்டு சமூக தளங்களை ஃபயர் ஆக்கினார் ஹர்திக் பாண்ட்யா.

செர்பியன் மொடலான இவர் 2012ல் இந்தியாவுக்கு வந்தார். அப்படியே ஜான்சன் & ஜான்சன், டியூரக்ஸ் விளம்பரங்களில் நடித்த நடாசா, பிக்பாஸ் 8வது சீசனில் கலந்து கொண்டார். திருமணம் ஆகாமலேயே கர்ப்பமான நடாஷாவுக்கு நேற்று தான் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தீபிகா பல்லீகள் கார்த்திக்

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின் மனைவி, தீபிகா. தேசிய ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகாவை, தினேஷ் 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

தினேஷின் முதல் மனைவி நிகிதா என்பவர் தான். ஆனால், இருவரும் பிரிய, நிகிதா மற்றொரு கிரிக்கெட் வீரரான முரளி விஜய்யை திருமணம் புரிய, தினேஷ் கார்த்திக் தீபிகாவை கரம் பிடித்தார்.

நுபூர் நகர்

புவனேஷ் குமாரின் மனைவி தான் நுபூர் நகர். அணியில் புவனேஷ் குமார் இருக்குற இடமே தெரியாது, அவ்ளோ அமைதியான இவர் தேடி கண்டுபிடித்த பெண் தான் நுபூர் நகர். மறந்தும் கூட, இவர் மனைவியை சமூக தளங்களில் கூட காண முடியாது. அவ்ளோ ஹோம்லி பெண்ணாம்.

ஆயீஷா முகர்ஜி

அவுஸ்திரேலியாவில் பிறந்த ஆங்லோ – பிரிட்டிஷ் பெண்ணான ஆயீஷா தான் அதிரடி மன்னன் ஷிகர் தவானின் மனைவி.

34 வயதான ஷிகர், 44 வயதான ஆயீஷாவை 2012ல் திருமணம் செய்து கொண்டார். ஆயீஷாவுக்கு இது 2வது திருமணமாகும்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்