விராட் கோஹ்லி, நடிகை தமன்னாவை கைது செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரிய பிராகாசம் தாக்கல் செய்துள்ளார், மேலும் ஆன்லைன் சூதாட்ட பயன்பாடுகளை தடை செய்யுமாறு உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இளம் தலைமுறை சூதாட்டத்திற்கு அடிமையாகி வருவதாக வழக்கறிஞர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரங்களில் நடித்து ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிப்பதற்காக கோஹ்லி-தமன்னா இரு நட்சத்திரங்களையும் கைது செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் சூரிய பிராகாசம் வலியுறுத்தியுள்ளார்.

வழக்கறிஞர் சூரிய பிராகாசம் தாக்கல் செய்த மனு ஆகஸ்ட் 4ம் திகதியன்று விசாரணைக்கு வர உள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்