இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரருக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா? வெளியான புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுஸ்வேந்திர சாஹலுக்கு, தன்ஸ்ரீ என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சுழற்பந்து வீச்சாளரானயுஸ்வேந்திர சாஹல்.

ஐ.பி.எல் தொடரிலும் பெங்களூர் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் யுஸ்வேந்திர சாஹல், சமூக வலைதளங்களில் எப்பொழுதும் அக்டிவாக இருக்கும் இந்திய வீரர்களில் முதன்மையானவர்.

யுஸ்வேந்திர சாஹல், பிரபல யூடியூபர் தனஸ்ரீ வர்மாவை திருமணம் செய்ய உள்ளார்.

தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதை சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள யுஸ்வேந்திர சாஹல், அதில் தான் கரம்பிடிக்க உள்ள பெண்னுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

சாஹலுக்கு விராட் கோஹ்லி, சேவாக், வாசிங்டன் சுந்தர் போன்ற பல வீரர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மருத்துவரான தனாஸ்ரீ நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி, அதில் நடனமாடி தனது திறமையை வெளிகாட்டி வரும் இவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்