அபராதம் விதித்த தந்தைக்கு கிறிஸ்துமஸ் பரிசு இல்லை: செல்லமாக மிரட்டிய ஸ்டூவர்ட் பிராடு

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்
306Shares

மகன் என்பதையே கருத்தில் கொள்ளாமல் தமக்கு அபராதம் விதித்த தந்தைக்கு இந்த முறை தாம் கிறிஸ்துமஸ் பரிசு அளிக்கப்போவதில்லை என செல்லமாக மிரட்டியுள்ளார் ஸ்டூவர்ட் பிராடு.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் யாசிர் ஷாவின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் இழிவாக பேசியதாக கூறி ஆட்ட நடுவர் கிறிஸ் பிராடு அபராதம் விதிக்க கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கையை ஐ.சி.சி ஏற்றுக்கொண்டதுடன், பிராட்டின் போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதமாக விதித்தது. மேலும் ஒரு தகுதி இழப்பு புள்ளியும் இதனால் ஸ்டூவர்ட் பிராடு பெற்றுள்ளார்.

இந்த நிலையில் டுவிட்டர் பக்கத்தில் தந்தையால் மகன் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் வெளியாக, அதற்கு ஸ்டூவர்ட் செல்லமாக மிரட்டி பதிலளித்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பொதுவாக மகன் ஸ்டூவர்ட் பிராடு விளையாடும் போட்டிகளில் ஆட்ட நடுவராக பணியாற்ற கிறிஸ் பிராடு மறுப்பு தெரிவிப்பதே வழக்கமாம்.

ஆனால் கொரோனா பயண கட்டுப்பாடுகள் காரணமாக இங்கிலாந்தின் 6 டெஸ்ட் போட்டிகளின் ஆட்ட நடுவராக பணியாற்ற ஐ.சி.சி கிறிஸ் பிராடை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்