அந்த விருதுக்காக இனி எத்தனை பதக்கங்களை குவிக்க வேண்டும்? சாக்‌ஷி எழுப்பிய கேள்வி

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்
136Shares

அர்ஜுனா விருதுக்காக இனி நான் எத்தனை பதக்கங்களை குவிக்க வேண்டும் என மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டு தோறும் தேசிய விளையாட்டு விருதுகள் இந்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், ராஜீவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா, துரோணாச்சாரியா ஆகிய விருது பெறும் பட்டியலை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட அர்ஜூனா விருதுக்கான பட்டியலில் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்பட 29 பேரின் பெயர்கள் இடம் பெற்று இருந்தது.

ஏற்கனவே உயரிய கேல் ரத்னா விருதை பெற்றுள்ள சாக்‌ஷி மாலிக் விவகாரத்தில் மத்திய விளையாட்டு அமைச்சர் இறுதி முடிவு எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்த சாக்‌ஷி மாலிக், மீராபாய் சானு ஆகிய இருவரின் பெயரை மத்திய விளையாட்டு அமைச்சகம் நிராகரித்தது.

இந்த நிலையிலேயே, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் சாக்‌ஷி மாலிக், அர்ஜுனா விருதுக்காக நான் இனி எத்தனை பதக்கங்களை குவிக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்