தனது அசத்தலான நடனத்தால் அனைவரையும் ஈர்த்த இந்திய கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி! வெளியான வீடியோ

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
1009Shares

இந்திய கிரிக்கெட் அணி வீரர் சாஹலின் வருங்கால மனைவி அசத்தலாக நடனமாடிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.

இந்திய சுழல் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் சமீபத்தில் தனது நிச்சயதார்த்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததன் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

அவரின் வருங்கால மனைவி தனஸ்ரீ வர்மா தொழில் ரீதியாக மருத்துவராக இருந்தாலும், சிறந்த நடனக் கலைஞராகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தனஸ்ரீ வர்மாவின் சமீபத்திய நடன வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இந்த வீடியோவில், தனஸ்ரீ தனது வித்தியாசமான நடன அசைவுகளால் ரசிகர்களை ஈர்க்கிறார், அவரின் நடன அசைவுகள் மிகவும் நன்றாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்