இலங்கை கிரிக்கெட் அணி வீரருக்கு திருமணம் முடிந்தது! வெளியான தம்பதியின் அழகான புகைப்படங்கள்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தசுன் சனகாவுக்கு திருமணம் நடந்துள்ள நிலையில் தம்பதியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியில் ஆல் ரவுண்டராக இருப்பவர் தசுன் சனகா. 28 வயதான சனகா கடந்த 2015ஆம் ஆண்டு சர்வதேச அணியில் இடம்பிடித்தார்.

இதுவரை 22 ஒருநாள் போட்டிகளிலும், 39 டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.

இதோடு இலங்கை சர்வதேச அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கை டி20 அணியின் தலைவராக செயல்பட்ட சனகா தலைமையிலான அந்த அணி பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை வென்றது.

இந்த நிலையில் சனகாவுக்கும், செவந்தி என்ற பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

தம்பதியின் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்