ஐபிஎல் போட்டிக்கான தீவிர பயிற்சியின் நடுவிலும் குடும்பத்துடன் ரோகித் சர்மா நேரம் செலவிடும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டிகள் வரும் 19ம் திகதி துவங்கவுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கே அணியுடன் முதல் நாளிலேயே மோதவுள்ளது. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் பயிற்சி ஆட்டங்களை முடித்துக் கொண்டு அந்த அணி வீரர்கள் பாதுகாப்புடன் தங்களது குடும்பத்தினருடன் கடற்கரையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக அணியின் கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய மனைவி ரித்திகா மற்றும் மகள் சமைராவுடன் பின்புலத்தில் சூரிய அஸ்தமனத்துடன் கடற்கரையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
இதன் புகைப்படங்களை மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. சில வீரர்கள் அலைகளில் நீச்சலடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Beach Mode 💙👨👩👧#OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL @ImRo45 @ritssajdeh pic.twitter.com/NCcRPttqK7
— Mumbai Indians (@mipaltan) September 7, 2020
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்