விவாகரத்து செய்த மனைவிக்கு ரூ 192 கோடியை வாரி கொடுத்த பிரபல கிரிக்கெட் வீரர்!

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஜாம்பவனான மைக்கேல் கிளார்க். அணித்தலைவராகவும் இருந்த இவர் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார்.

இவருக்கும் கீலி கிளார்க் என்ற பெண்ணுக்கும் கடந்த 2012ல் திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு 2015ல் பெண் குழந்தை பிறந்தது.

நன்றாக சென்று கொண்டிருந்த மைக்கேல் - கீலி வாழ்க்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு விரிசல் ஏற்பட்ட நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் பரஸ்பர அடிப்படையில் நிரந்தரமாக பிரிந்தனர்.

இந்த விவாகரத்தின் போது கிளார்க் சுமார் 192 கோடி ரூபாய் மனைவிக்கு கொடுத்திருக்கிறார்.

விளையாட்டு துறையை சேர்ந்த வீரர் ஒருவர் மனைவிக்கு விவாகரத்தின் போது கொடுத்த மிகப்பெரிய தொகையாக இது பார்க்கப்படுகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்